ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (11:33 IST)
ரிலையன்ஸ் ஜியோவின் இலவச மொபைலை விரைவில் பயன்படுத்த ஆவலோடு காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


 


 
நிலையன்ஸ் ஜியோ ஆரம்பம் முதல் ஏராளமான சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஜியோபோன் என்ற இலவச மொபைல் வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்தது. அந்த இலவச மொபைலை பெற முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கு இருப்பு தொகையும் செலுத்த வேண்டும். 3 வருடங்கள் கழித்து இருப்பு தொகை திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் ஜியோபோனை முன்பதிவு செய்து பயன்படுத்த காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் விநியோகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படது. ஆனால் ஜியோபோன் முன்பதிவு அதிக அளவில் இருந்ததால், முன்பதிவு நிறுத்தப்பட்டது. 
 
ஜியோபோன் அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பல லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் இன்னும் பலர் முன்பதிவு செய்ய காத்திருக்கின்றனர். மேலும் ஜியோபோன் முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரபல ஊடகத்திற்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்.. என்ன காரணம்?

பங்குச்சந்தையில் புதியவரி.. இன்ட்ரா டே வர்த்தகர்களுக்கு ஆப்பு வைத்த நிர்மலா சீதாராமன்..!

இதுக்கு பங்குச்சந்தை ஓப்பன் ஆகாமலே இருந்திருக்கலாம்.. இன்று மோசமான நாள்.. 1800 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு..!

மத்திய பட்ஜெட்டால் விலை குறையும் பொருட்கள், விலை உயரும் பொருட்கள் எவை எவை?

ஆசிரியர் தகுதி தேர்வு: தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 4,24,317.. தேர்ச்சி பெற்றவ்ர்கள் 1.50 லட்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments