Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனைத்து ஓலா வாகனங்களிலும் "வை-ஃபை" வசதி: தலைமை விற்பனை அதிகாரி தகவல்

அனைத்து ஓலா வாகனங்களிலும்
, வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (16:10 IST)
வாடகை கார் சேவை வழங்கி வரும் ஓலா நிறுவனம் தங்கள் வாகனங்கள் அனைத்திலும் விரைவில் வை-ஃபை இணைய வசதியை அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.


 

 
இது குறித்து, ஓலா நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரி ரகுவேஷ் ஸரூப் கூறியதாவது:
 
ஓலா நிறுவனம் தற்போது "பிரைம்" பிரிவு வாடகைக் கார்களில் இலவச "வை-ஃபை" இணைய வசதி அளித்து வருகிறது.
 
ஒவ்வொரு முறை "பிரைம்" பிரிவு கார்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் போதும் கடவுச் சொற்களைப் பதிவு செய்து உள்நுழைய வேண்டிய முறை தற்போது உள்ளது.
 
இந்த முறைமையில் மாற்றம் செய்துள்ளோம். அதன்படி இனி "பிரைம்" பிரிவு வாடகைக் காரைப் பயன்படுத்தும்போது, ஒரே முறை வாடிக்கையாளரின் விவரங்களைப் பதிவு செய்தாலே போதுமானது.
 
அதன் பின்னர், எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஓலா "பிரைம்" வாகனத்தை வாடிக்கையாளர் பயன்படுத்தினாலும் "வை-ஃபை" வசதியைத் தடையின்றி பெற முடியும்.
 
புது டெல்லியில், ஓலா "பிரைமில்" முதல் 4 கி.மீ. பயணத்துக்கு ரூ. 100 அடிப்படைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
 
இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு கி.மீ. பயணத்துக்கும் ரூ. 10 வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், எங்களது "மைக்ரோ", "மினி", ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளிட்ட ஓலாவின் அனைத்து ரக வாகனங்களிலும் இலவச வை-ஃபை வசதியை வழங்கவுள்ளளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil