Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிஎப் பணம் எடுக்க புதிய மொபைல் செயலி

பிஎப் பணம் எடுக்க புதிய மொபைல் செயலி
, செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (10:01 IST)
பிஎப் பணத்தை எடுக்க மொபைல் ஆப் அறிமுகம் செய்ய பிஎப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 
இதில், இ-கேஒய்சி முறையில் ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்து விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும். தற்போதைய நிலையில், பிஎப் பணம் எடுக்க அல்லது பென்ஷனுக்கு விண்ணப்பிக்க என அனைத்துக்கும் அதற்கான படிவத்தை நிரப்பி நேரில் சென்று வழங்க வேண்டும். இதற்கு மாற்றாக, மொபைல் ஆப்ஸ் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை பிஎப் நிறுவனம் வழங்க உள்ளது.  
 
இந்த ஆன்லைன் சேவையை அளிக்க முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 123 பிஎப் அலுவலகங்களில் இருந்து பிஎப் சந்தாதாரர்களின் விவரங்கள் பெறப்பட்டு, டெல்லியில் உள்ள மத்திய அலுவலக சர்வரில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 
 
அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது பணியாற்றிய நிறுவனம் உள்ளிட்ட விவரங்கள் ஆப்ஸ் மூலமாகவே பெறப்படும். பணியில் இருந்து ஓய்வுபெறும் அல்லது விலகும் தொழிலாளர் நேரடியாகவே விண்ணப்பிக்கலாம் என்று தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவின் உடல்நிலை: கண் கலங்கிய கருணாநிதி!