Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடக்கப்பட்ட எஸ்பிஐ டெபிட் கார்டு: 10 நாட்களுக்குள் புதிய கார்டு

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (10:35 IST)
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்த 6 லட்சம் டெபிட் கார்டுகளை முடக்கம் செய்தது. 

 
இந்த முடக்கப்பட்ட கார்டுகளுக்கு பதிலாக 10 நாட்களுக்குள் புதிய கார்டுகள் வழங்கப்படும் என ​எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
 
ஏடிஎம் கார்டுகளின் தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் எஸ்பிஐ வங்கியின் 6 லட்சம் டெபிட் கார்டுகள் உட்பட 30 லட்சத்துக்கும் மேற்பட்ட டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டன்.
 
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் முடக்கப்பட்ட 6 லட்சம் டெபிட் கார்டுகளுக்கு பதிலாக புதிய டெபிட் கார்டுகள் இன்னும் 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும் என்றும எஸ்பிஐ வங்கியின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் பண பரிவர்த்தனைகளை, கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்களில் மட்டும் மேற்கொள்ளும்படி எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.
 
கடந்த ஜூலை மாத நிலவரப்படி, நாடு முழுவதும் 4.75 கோடி டெபிட் கார்டுகள் விநியோகிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. ஒரு வாரம் ஆகியும் சிக்காத குற்றவாளி..!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. வெள்ளி விலையும் உயர்வு..!

அமலாக்கத்துறை முக்கிய அதிகாரி திடீர் ராஜினாமா.. இரு முதல்வர்களை கைது செய்தவர்..!

முதல்வர் ஸ்டாலின் சகோதரர் மு.க.முத்து காலமானார்! அரசியல் பிரபலங்கள் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments