Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விரைவில் வெளியாகிறது புதிய வடிவிலான 100 ரூபாய் நோட்டு

விரைவில் வெளியாகிறது புதிய வடிவிலான 100 ரூபாய் நோட்டு
, புதன், 12 ஆகஸ்ட் 2015 (10:48 IST)
புதிய வடிவிலான நூறு ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புதிய வடிவிலான 100 ரூபாய் நோட்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கையெழுத்துடன் இருக்கும் என்றும், நோட்டின் முன், பின் பகுதிகளில் ரூபாய்க் குறியீட்டுடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், இந்த நோட்டுகளின் வடிவமைப்பு எல்லா வகையிலும் முன்னர் வெளியிடப்பட்டுள்ள "மகாத்மா காந்தி வரிசை- 2005"  ரூ.100 வங்கி நோட்டுகளை ஒத்ததாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், முன்னர் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து 100 ருபாய் நோட்டுகளும் சட்டப்படி தொடர்ந்து செல்லத் தக்கது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil