Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பைஸ்ஜெட்டில் பண்டிகைக் கால சிறப்பு கட்டண சலுகை

ஸ்பைஸ்ஜெட்டில் பண்டிகைக் கால சிறப்பு கட்டண சலுகை

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2016 (16:26 IST)
இந்தியாவின் மிக குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், பண்டிகைக் கால சிறப்பு கட்டண சலுகையை அறிவித்துள்ளது.


 
 
இந்திய நகரங்களுக்கிடையே விமான பயணம் செய்ய ரூ.888 கட்டணத்திலும், வெளிநாடுகளுக்கு நேரடி விமானங்களில் பயணம் செய்ய ரூ.3,699 கட்டணத்தையும் பண்டிகைக் கால சலுகையாக அறிவித்துள்ளது.
 
இந்திய நகரங்களான பெங்களூரு-கொச்சி, தில்லி-டேராடூன், சென்னை-பெங்களூரு சேவையில் வரி உட்பட ஒரு வழி பயணத்துக்கு ரூ.888 கட்டணம் வசூலிக்கப்படும். சென்னை-கொழும்பு செல்லும் சர்வதேச விமானத்தில் ரூ.3,699 கட்டணத்திலும் பயணம் செய்யலாம் என ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.
 
இந்த சலுகைக் கட்டணத்தில் விமான சேவை மேற்கொள்வதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. அக்டோபர் 7ம் தேதி வரை இதற்கான முன்பதிவு நடைபெறும்.
 
இந்த சலுகைக் கட்டணத்துக்கு குறைந்த அளவு இருக்கைகளே ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற ரீதியில் இது கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பண்டிகைக் கால நெருக்கடி களைத் தவிர்க்க முடியும் என்வும் தெரிவித்துள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments