Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச் சந்தையில் வீழ்ச்சி - ஒரே நாளில் 414 புள்ளிகள் சரிவு

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (19:14 IST)
மும்பை பங்குச் சந்தை, இன்று பெரும் வீழ்ச்சி கண்டது. ஒரே நாளில் 414 புள்ளிகள் சரிந்தன. கடந்த மூன்று வாரங்களில் இதுவே ஒரு நாளில் ஏற்பட்ட மிகப் பெரிய வீழ்ச்சியாகும். உலக அளவில் அதிக அளவு பங்குகள் விற்கப்பட்டதால், இந்தியப் பங்குச் சந்தைகளிலும் அதன் தாக்கம் அதிகமாகத் தென்பட்டது.
 
இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 414 புள்ளிகள் சரிந்து 25,480 என்ற நிலையிலும், நிப்டி 118 புள்ளிகள் சரிந்து 7,602 என்ற நிலையிலும் இருந்தன. 
 
மாருதி, டிஎல்எப், அல்ட்ரா செம்கோ, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தையும், ஹிண்டால்கோ, ரிலையன்ஸ், சன் பார்மா, சிப்லா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தையும் அடைந்தன.

நேற்று மும்பை பங்குச் சந்தை, 192.45 புள்ளிகள் சரிந்தது, குறிப்பிடத்தக்கது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, சென்செக்ஸ், 646 புள்ளிகள் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments