பேட்டரி சொகுசு கார்: 600 குதிரைகளின் திறன், லூசிட் மோட்டார்ஸ்!!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (12:48 IST)
லூசிட் மோட்டார்ஸ் நிறுவனம், பேட்டரியில் இயங்கக்கூடிய அதிநவீன சொகுசு காரை அறிமுகம் செய்துள்ளது.


 
 
செடான் ரகத்தைச் சேர்ந்த இந்த காரின் விலை ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களாகும். லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் இதனை லூசிட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
 
100 கிலோ வாட் திறன் கொண்ட பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. 130 கிலோ வாட் பேட்டரியும் பொருத்த, திட்டமிட்டுள்ளதாக லூசிட் கூறியுள்ளது. 
 
ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலமாக, 400 மைல் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 600 முதல் 1000 குதிரைத்திறன் கொண்டதாக இந்த கார் இருக்கும். 
 
2.5 நொடிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் என்ற வேகத்தை எட்டக்கூடிய சிறப்பம்சம் கொண்ட உலகின் முதல் பேட்டரி கார் இது எனவும் லூசிட் மோட்டார்ஸ் குறிப்பிட்டுள்ளது.
 
இந்த காருக்கான பேட்டரியை சாம்சங் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுக்கு சாவு மணி அடிச்சாச்சி!.. மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!...

ஈரோடு பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையனுக்கு இன்சல்ட்?!.. ஆதரவாளர்கள் குமுறல்!...

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம்!.. நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்!...

பேட்டியில் தொகுப்பாளருடன் கட்டிப்பிடி சண்டை போட்ட ராம்தேவ்!.. வீடியோவால் பரபரப்பு!...

SIR: 97 லட்சம் பெயர்கள் நீக்கம்!.. முதல்வர் ஸ்டாலின் நெக்ஸ்ட் மூவ் என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments