Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோவின் வங்கி சேவை: எஸ்பிஐயுடன் கூட்டணி!

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (15:12 IST)
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் யாரும் எதிர்பாராத புதிய அற்விப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வழக்கமாக ஜியோ அறிவிப்புகள் சலுகைகளை பற்றி இருக்கும் என நினைத்த நிலையில், இந்த அறிவிப்பு இதற்கு மாறானதாக இருக்கிறது.
ஆம், ஜியோ நிறுவனம் வங்கி சேவை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, தொலைத்தொடர்பு, கேபில் டிவி, போன் தயாரிப்பு என ஈடுப்பட்டு வரும் ஜியோ அடுத்து வங்கி சேவையில் களமிறங்கவுள்ளது. 
 
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் எஸ்பிஐ வங்கி இணைந்து அடுத்த தலைமுறைக்கான வங்கி சேவையினை அறிமுகம் செய்துள்ளது. இது ஜியோ பிரைம், எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் பரிவர்த்தனையினை அதிகரிக்க உதவும்.
 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது மைஜியோ செயலியில் எஸ்பிஐ யோனோ சேவைனையும் ஒருங்கிணைத்து வழங்க உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் இதனை வாடிக்கையாளர்களின் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments