நிறுத்தப்பட்ட ஜியோ போன் முன்பதிவு: காரணம் என்ன!!

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (14:18 IST)
ரிலையன்ஸ் ஜியோ தனது புதிய பீச்சர் போன் ஒன்றை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதன் முன்பதிவு ஆகஸ்டு 24 ஆம் தேதி மாலை துவங்கியது.


 
 
ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை மையங்கள் மட்டும் பல்வேறு விற்பனை மையங்களிலும் ஜியோபோன் முன்பதிவு நடைபெற்றது. இதை தவிர்த்து ஆன்லைனிலும் முன்பதிவு நடத்தப்பட்டது.
 
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இலவச ஜியோ போன் முன்பதிவு நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த தகவல் ஜியோ இணைய பக்கம் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
 
ஜியோபோனை வாங்க சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதால், முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், முன்பதிவு மீண்டும் துவங்கும் போது தெரிவிக்கப்படும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

தமிழகம் வருகிறார் அமித்ஷா.. சுறுசுறுப்பாகும் தேர்தல் களம்..!

ஜனவரி வரைக்கும் வெயிட் பண்ணுங்க!.. தவெக இனிமே வேறலெவல்!.. செங்கோட்டையன் மாஸ்!...

காங்கிரஸ் எம்பிக்களுடன் ராகுல் காந்தி திடீர் ஆலோசனை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments