Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பு என்ன தெரியுமா??

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2017 (11:10 IST)
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியலில் இந்திய பாஸ்போர்ட்டுக்கு 78-வது இடம் கிடைத்துள்ளது.


 
 
பன்னாட்டு நிதி ஆலோசனை நிறுவனமான ஆர்டன் கேபிடல் என்ற நிறுவனம், விசா இல்லாமல் அதிக நாடுகளுக்கு செல்லக் கூடிய அனுமதி உள்ள பாஸ்போர்ட்டுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டது.
 
இந்த ஆய்வின் முடிவில் 157 புள்ளிகளுடன் ஜெர்மனி நாட்டின் பாஸ்போர்ட் முதலிடம் பிடித்தது. 156 புள்ளிகளுடன் சிங்கப்பூர் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் இரண்டாம் இடத்தை பிடித்தன. ஆசிய கண்டத்தை பொறுத்த வரை சிங்கப்பூர் முதலிடமும், தென் கொரியா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
 
இந்த பட்டியலில் 46 புள்ளிகளை பெற்றுள்ள இந்தியாவுக்கு 78-வது இடம் கிடைத்துள்ளது. மேலும், சீனா 58-வது இடத்தையும், இலங்கை 89-வது இடத்தையும், பாகிஸ்தான் 94-வது இடத்தையும் பிடித்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி

மது அருந்தினால் 200 நோய்கள் தாக்கும்: எச்சரிக்கை வாசகங்கள் அச்சிட அன்புமணி கோரிக்கை

ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலானாய்வுக்குழு சோதனை.. கைப்பற்றப்பட்ட தொப்பி..!

திமுக எம்பி கதிர் கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை.. பரபரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments