Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2016-17 ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி

2016-17 ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி
, வியாழன், 7 ஜனவரி 2016 (15:37 IST)
2016-17 ஆம் நிதியாண்டில்  இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கூறியுள்ளது.


 

 
இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய பொருளாதார வளர்ச்சி 0.1 சதவீதம் அளவுக்கு 2016, 2017 ஆம் ஆண்டுகளில் குறையும்.
 
ஆயினும், உலக அரங்கில், சீன பொருளாதாரத்தைவிட இந்திய பொருளாதாரம் மேம்பட்டுக் காணப்பட வாய்ப்புள்ளது.
 
இந்த நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதகமாக இருக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அது 7.9 சதவீதமாக உயரும்.
 
பிரேசில், ரஷ்ய நாட்டுகளின் பொருளாதாரம் 2016 ஆம் ஆண்டு மந்த நிலையிலேயே காணப்படும். வளர்ந்து வரும் பல நாடுகளின் பொருளாதாரம் மந்த நிலையிலேயே நிடிக்கும். 
 
ஆனால், முதலீட்டாளர்களின் உறுதி மிக்க மனநிலை, எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகிய காரணங்களால் கிடைத்த வருவாய் உள்ளிட்ட காரணிகளால் இந்திய பொருளாதாரம் எழுச்சியுடன் காணப்படும்.
 
கடந்த 2009 ஆம் ஆண்டு 7.9 சதவீதமாக இருந்த நடப்பு கணக்குப் பற்றாக்குறை மத்திய அரசின் நடவடிக்கையால் 4 சதமாக குறைந்துள்ளது". என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
உலக பொருளாதரம் குறித்த அனுமானம் பற்றி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உலக வங்கி வெளியிட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil