நாங்களும் ஆஃபர் கொடுப்போம்ல... எகிரிய ஐடியா; அமுக்கிய ஜியோ

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (11:55 IST)
ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜியோவின் சலுகைக்கு போட்டியாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
வோடபோன் சமீபத்தில் ரூ.399 பிரீபெயிட் சலுகை மாற்றி தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து ஐடியா நிறுவனமும் தனது ரூ.399 சலுகையை மாற்றி வோடபோன் வழங்கிய அதே சலுகையை வழங்கியது.
 
இப்போது ரூ.392 என்ற விலையில் புது சலுகை ஒன்றை வழங்கியுள்ளது. இந்த சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 60 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
 
வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் ரூ.399 சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. 
 
ஜியோவின் ரூ.399 சலுகையில் தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் கால் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்த இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments