Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்போ பிஎஸ்என்எல் இப்போ ஐடியா: சலுகைகளை வாரி வழங்கும் நிறுவனங்கள்

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (10:10 IST)
ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகள் முதல் மூன்று மாதங்களுக்கு அனைத்துச் சேவைகளையும் இலவசமாக வழங்குகிறது. இதனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன.


 
 
அந்த வரிசையில் ஐடியா நிறுவனம், அன்-லிமிட்டெட் வாய்ஸ் கால்களுக்கு நாடு முழுக்க குறைக்கப்பட்ட புதிய கட்டணங்களை நிர்ணயத்துள்ளது.
 
சுமார் 17.6 கோடி வாடிக்கையாளர்களுடன் நாட்டின் மூன்றாவது பெரிய நிறுவனமாக ஐடியா விளங்குகின்றது. விலை குறைப்பு குறித்து ஐடியா சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் சலுகைகளுக்கான அறிவிப்பு மின்னஞ்சல் மூலம் ஐடியா வழங்கி வருவதாக கூறப்படுகின்றது.
 
புதிய சலுகைகளில் அதிகளவு கட்டணங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாகவும் இச்சலுகைகளை எளிதாகப் பெற முடியும் என்றும் தெரிகிறது. 
 
ஐடியா மொத்தமாக 22 டெலிகாம் வட்டாரங்களில் ஆதித்தியா பிர்லாவின் தொலைத்தொடர்பு நிறுவனம் நெட் மூலம் மேற்கொள்ளக் கூடிய அழைப்புகளை ரூ.345-350 வரை வழங்கி வருகின்றன. இம்முறை ஐடியா நிறுவனம் சுமார் 20 சதவீதம் வரை கட்டணங்களை குறைத்து ரூ.299க்கு அன்-லிமிட்டெட் சேவையினை வழங்கி வருகின்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments