Webdunia - Bharat's app for daily news and videos

Install App

84 நாட்களுக்கு ஐடியாவின் புதிய ரீசார்ஜ் ப்ளான்!!

Webdunia
சனி, 9 டிசம்பர் 2017 (14:15 IST)
சமீபத்ஹில் வெளியான கணக்கீடுகளில் அப்லோடு வேகங்களில் ஐடியா நெட்வொர்க் நிறுவனம் நொடிக்கு 6.4 எம்பி வேகம் வழங்கி ஜியோ மற்றும் ஏர்டெல்லை பின்னுக்கு தள்ளியது.
 
ஜியோவின் மலிவு விலை திட்டங்களை குறிவைத்து அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவன திட்டங்களுக்கு நேரடி போட்டியாக சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஐடியா நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ரூ.509 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய திட்டத்தில் உள்ள சலுகைகளை காண்போம். 
 
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி அளவில் 3ஜி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
இதோடு, அடுத்த ஒரு வருடத்திற்கு ஐடியா நெட்வொர்க்கில் ரூ.300-க்கும் அதிகமான தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்வோருக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த கேஷ்பேக் தொகையை ரூ.51 வீதம் அடுத்த ஏழு ரீசார்ஜ்களில் தள்ளுபடியாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷா,அதானி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி: உத்தவ் தாக்கரே கட்சி குற்றச்சாட்டு

ஜார்கண்ட் மாநிலத்தில் திடீர் திருப்பம்.. ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி..!

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது பாஜக புகார்

காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த உத்தவ் தாக்கரே படுதோல்வி.. எடுபடாத ராகுல் பிரச்சாரம்..!

ஒரே வாரத்தில் 3000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments