Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜாகுவார் எக்ஸ் எஃப் முழு விவரம்: ஒரு பார்வை

ஜாகுவார் எக்ஸ் எஃப் முழு விவரம்: ஒரு பார்வை
, செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (10:58 IST)
ஜாகுவார் இந்தியா நிறுவனம், தங்களின் அடுத்த தலைமுறை ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு காரின் விவரக்குறிப்புகளை  வெளியிட்டுள்ளது. 


 
 
இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் நிறுவனம் தங்களின் உயர் தர சொகுசு கார்களுக்கு உலகம் முழுவதும் புகழ் பெற்றதாக விளங்குகிறது. இந்தியாவிலும், ஜாகுவார் நிறுவன கார்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 
 
வேரியன்ட்கள்:
 
புதிய ஜாகுவார் எக்ஸ் எஃப் சொகுசு கார், ப்யூர், பிரெஸ்டீஜ் மற்றும் போர்ட்ஃபோலியோ ஆகிய 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது.
 
கியர்பாக்ஸ்:
 
ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு காரின் 3 வேரியன்ட்களின் இஞ்ஜின்களும், 8-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலமாக தான் பின் சக்கரங்களுக்கு பவர் கடத்தப்படுகிறது.
 
இஞ்ஜின் - 1:

புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு காரின் 3 வேரியன்ட்களுக்கும், 4-சிலிண்டர்கள் உடைய 2.0 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய இன்ஜீனியம் சீரிஸ் டீசல் இஞ்ஜின் பொறுத்தப்பட்டிருக்கிறது. 
 
இந்த இஞ்ஜின், 178 பிஹெச்பி பவரையும், 430 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக இருக்கும். இந்த இஞ்ஜின் பொருத்தப்பட்ட புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 8.1 நொடிகளில் எட்டிவிடும்.
 
மோட்கள்:
 
ஜாகுவார் நிறுவனம், இந்த புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு காருக்கு, ஜாகுவார் டிரைவ் கண்ட்ரோல் ('Jaguar Drive Control') என்ற வசதியினை வழங்குகிறது. 
 
இதன் மூலம் வாடிக்கையாளர்கள், ஸ்டாண்டர்ட், எகோ, டைனமிக் மற்றும் ரெயின் / ஐஸ் / ஸ்னோ ஆகிய 4 மோட்களில் இருந்து தங்களுக்கு பிடித்த டிரைவிங் மோடை தேர்வு செய்து கொள்ளலாம்.
 
ப்யூர் - சிறப்பு அம்சங்கள்:
 
புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு காரின் ப்யூர் வேரியன்ட்டில் 8-இஞ்ச் டச் ஸ்க்ரீன், 17 இஞ்ச் அல்லாய் வீல்கள், பை-ஃபங்க்ஷனல் செனான் ஹெட்லேம்ப்கள், எலக்ட்ரிக்கல் முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன் சீட்கள் ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
 
பிரெஸ்டீஜ் - சிறப்பு அம்சங்கள்:
 
புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு காரின் பிரெஸ்டீஜ் வேரியன்ட்டில், லெதர் சீட்கள், டிரைவர் சீட்டிற்கான மெமரி ஃபங்க்ஷன் மற்றும் ஸ்டீயரிங் வீல் ஆகிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

போர்ட்ஃபோலியோ - சிறப்பு அம்சங்கள்:
 
புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு காரின் போர்ட்ஃபோலியோ வேரியன்ட்டில், 18-இஞ்ச் வீல்கள், 14-முறைகளில் எலக்ட்ரிக்கல் முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன் சீட்கள் ஆகிய பல்வேறு அம்சங்கள் உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஜக்கி வாசுதேவ் சொன்னால் தான் திருமணம்’ - அடம்பிடிக்கும் மகளால் பெற்றோர் கண்ணீர்