Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஃபோர்ட் கார்களின் விலை ரூ.91,000 வரை குறைப்பு

ஃபோர்ட் கார்களின் விலை ரூ.91,000 வரை குறைப்பு

ஃபோர்ட் கார்களின் விலை ரூ.91,000 வரை குறைப்பு
, வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (10:13 IST)
இந்திய சந்தையில் ஃபோர்டு நிறுவனம் தனது கார் விற்பனையை அதிகரிக்க அடிரடியாக தனது முக்கிய கார்களின் விலையை ரூ.25,000 முதல் ரூ.91,000 வரை குறைத்துள்ளது.


 


ஃபோர்டு ஆஸ்பியர்:

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கொண்ட ஃபோர்டு ஆஸ்பியர் காரின் விலை ரூ.5.28 லட்சத்தில் இருந்து ரூ.7.89 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. காரின் எளிமையான அம்சங்களைப் பொருத்து ஃபோர்டு ஆஸ்பியர் கார் விலை ரூ.25,000 முதல் ரூ.91,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ:

1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் கொண்ட ஃபோர்டு ஃபிகோ கார் ரூ.4.54 லட்சத்தில் இருந்து ரூ.6.29 லட்சம் வரையும், 1.5 லிட்டர் டீசல் இஞ்சின் கொண்ட ஃபோர்டு ஃபிகோ கார் ரூ.5.63 லட்சத்தில் இருந்து ரூ.7.18 லட்சம் வரை விற்கப்படுகிறது.

பெட்ரொல் கார்களின் விலையை ரூ.29,000 முதல் ரூ.30,000 வரையும், அதேபோல டீசல் கார் விலையை ரூ.50,000 வரை குறைத்துள்ளது.

இதுமட்டும் இல்லாமல் மாருதி சுசூகி, ஹோண்டா நிறுவனங்கள் தங்களின் கார் விலைகளை ஏற்றியுள்ள நிலையில் ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் இந்த விலை குறைப்பு இரண்டு நிறுவனங்களையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈஷா மையம் மீது மோடி நடவடிக்கை? - டெல்லி சென்ற மகள்களின் பெற்றோர்