தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல தங்களது சேவைக் கட்டணங்களை குறைத்து வரும் நிலையில் இம்முறை பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள களத்தில் இறங்கியுள்ளது.
இதன் படி பிஎஸ்என்எல் நிறுவனம் இரு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. அப்படியாக ரூ.1,125 மற்றும் ரூ.1,525 விலையில் போஸ்ட்பெயிட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
அன்லிமிட்டெட் அழைப்புகள்:
புதிய திட்டத்தின் மூலம் ஒரு மாதம் முழுக்க வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும். அனைத்து மொபைல் மற்றும் லேண்ட்லைன் நம்பர்களுக்கும் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
எஸ்டிடி அழைப்புகள்:
எஸ்டிடி அழைப்புகளும் முற்றிலும் இலவசம். இதற்கும் ஒரு மாத காலம் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது.
ரோமிங்:
பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரோமிங் கட்டணங்களை இலவசமாக்கியுள்ளது. இத்திட்டத்தில் ரோமிங் கட்டணங்கள் இலவசமாக்கப்பட்டுள்ளதோடு அழைப்புகளையும் இலவசமாகப் பெற முடியும்.
3ஜி ரோமிங் டேட்டா:
ரோமிங்கின் போது அழைப்புகள் இலவசமாக்கப்பட்டுள்ளது. மாதம் ஒன்றிற்கு 250 எம்பி வரை ரோமிங் டேட்டாவும் வழங்குகின்றது.
1ஜிபி இலவச டேட்டா:
ரோமிங் பயன்படுத்தாத நிலையில் மாதம் ஒன்றிற்கு 1ஜிபி வரை 3ஜி டேட்டாவினை பயன்படுத்த முடியும். மாத அளவு நிறைவடைந்ததும் சராசரி கட்டணம் வசூலிக்கப்படும் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.