செல்போன் பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுக்கலாமா...?

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (19:39 IST)
மோடி ஆட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதிலிருந்து அனைத்து தரப்பு மக்களும் டிஜிட்டல் மற்றும்  கார்ட் ( கிரடிட், டெபிட் ) பண பரிவர்த்தனைக்கு மாறிவிட்டார்கள் என்று தெரிகிறது.
இந்நிலையில் ஏடிஎம்களில் கார்டுகளைப் பயன்படுத்தினால் மட்டுமே பணம் எடுக்க முடியும்  என்ற நிலைமை நம் இந்தியாவில் உள்ள ஏடிஎம்களில் உள்ளது.
 
இந்நிலையில் பிரபல வங்கிகள் கூடிய விரைவில் ஸ்மார்ட் போன் மூலம் பணம் எடுப்பது பற்றிய அறிவிப்பை  வெளியிட உள்ளன.
 
அதாவது ஏடிஎம்களில் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள கியூ.ஆர்.குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் எடுப்பதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது.
 
ஸ்மார்ட் போன் வாயிலாக ஏடிஎம்களில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கிகளில் யூபிஐ செயலிகளை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
 
அதன்பின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தெரியும் கியூ ஆர்(QR) குறியீட்டினை யூபிஐ மூலம் ஸ்கேன் செய்து அதற்கேற்ற பாதுகாப்பான பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகுவதன் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
 
தற்போது முழு வீச்சில் இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் இந்திய தேசிய கொடுக்கல் நிறுவனம் இதற்கு அனுமதி தரவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
ஸ்மார்ட்போன் மூலம் பணம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றால் அது பாதுகாப்பானதாகவும் மிக்க பயனுள்ளதாக அமையும் என்று  வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விபத்து: விமானி பரிதாப பலி

அடுத்த கட்டுரையில்
Show comments