Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 5 லட்சம் விலையில் பிராண்டட் கார் மாடல்கள்

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (14:11 IST)
ரூ.5 லட்சம் என்ற முடிவோடு கார் வாங்க களமிறங்கும் மக்களுக்கு உதவும் வகையில், ஐந்து சிறந்த கார் மாடல்களின் தொகுப்பு.

 
மாருதி வேகன் ஆர்:
 
விலை: ரூ.4.35 லட்சம் 
 
மைலேஜ்: 20.51கிமீ/லி
 
ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கார் வாங்குபவர்களின் முதல் சாய்ஸ். இந்த காரில் 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் வழங்கும் 3 சிலிண்டர் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது. 180 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகள் உள்ளது. 
 
சிறப்பான ஹெட்ரூம், மைலேஜ், வசதிகள், விலை ஆகியவற்றுடன் மாருதியின் பரந்துவிரிந்த சர்வீஸ் நெட்வொர்க்கும் இதனை முன்னிறுத்தும் அம்சங்கள். பெட்ரோல், சிஎன்ஜி மாடல்களில் கிடைக்கிறது. 
 
மாருதி செலிரியோ:
 
விலை: ரூ.4.43 லட்சம்
 
மைலேஜ்: 23.1கிமீ/லி 
 
இந்த காரில் 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. 235 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.
 
அதிக மைலேஜ், விலை, ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன், மாருதி விற்பனைக்கு பிந்தைய சேவை போன்றவை சிறப்பம்சங்களாக கூறலாம். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாடல்களில் கிடைக்கிறது. 
 
ஃபோர்டு ஃபிகோ: 
 
விலை: ரூ.4.51 லட்சம்(பெட்ரோல்) 
 
மைலேஜ்: 15.6 கிமீ/லி
 
ஃபோர்டு ஃபிகோ பெட்ரோல் மாடல் ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் வாங்குவதற்கான சிறந்த மாடல். பின் வரிசையில் பவர் விண்டோஸ் கிடையாது. 
 
ஃபோர்டு ஃபிகோ பெட்ரோல் மாடலில் 70 பிஎச்பி பவரையும், 102 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கொண்டது. 
 
ஹூண்டாய் ஐ10: 
 
விலை: ரூ.4.68 லட்சம்
 
மைலேஜ்: 19.81 கிமீ/லி
 
நம்பகமான பட்ஜெட் கார் மாடல். டிசைன், இடவசதி, மைலேஜ், விலை, பிராண்டு மதிப்பு என பல ப்ளஸ் பாயிண்ட்டுகளை கொண்ட மாடல். இந்த காரில் 68 பிஎச்பி பவர், 99 என்எம் டார்க் வழங்கும் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. 225 லிட்டர் கொள்ளவு கொண்ட பூட்ரூம் உள்ளது. 
 
ரீசேல் மதிப்பிலும் சிறப்பாக இருந்து வரும் இந்த கார் பெட்ரோல் மட்டுமின்றி, எல்பிஜி மாடலிலும் கிடைக்கிறது. 
 
நிசான் மைக்ரா ஆக்டிவ்:
 
விலை: ரூ.4.79 லட்சம்
 
மைலேஜ்: 19.49 கிமீ/லி
 
நிசான் மைக்ரா ஆக்டிவ் காரில் 67 பிஎச்பி பவர், 104 என்எம் டார்க்கை வழங்கும் 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 251 லிட்டர் பூட்ரூம் கொள்ளளவு உள்ளதுடன், 41 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டது. 
 
டாப் வேரியண்ட்டில், இபிடி, ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், ஏர்பேக் கொண்டதாக கிடைக்கிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments