Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேறு வங்கி ஏடிஎம்மில் இனி 2 முறை மட்டுமே இலவசமாகப் பணம் எடுக்க முடியும்

வேறு வங்கி ஏடிஎம்மில் இனி 2 முறை மட்டுமே இலவசமாகப் பணம் எடுக்க முடியும்
, சனி, 2 ஆகஸ்ட் 2014 (16:32 IST)
ஒரு மாதத்தில் இரண்டு முறை மட்டுமே வேறு வங்கியின் ஏடிஎம்களில் இலவசமாக பணம் எடுப்பதற்கான உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது.

தற்போது நகர்புறங்களில் உள்ள அடுத்த வங்கி ஏடிஎம்களை மாதத்துக்கு இருமுறை மட்டுமே இலவசமாக பயன்படுத்திக் கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி புது உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிராமப்புறங்களில் தொடர்ந்து 5 முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை வங்கிகள் விரைவில் அமல்படுத்தும் என தெரிகிறது.

வேறு வங்கி ஏடிஎம்மில் மூன்றாவது முறை பணம் எடுக்கும் போது, அதற்கு கட்டணமாக ரூ.20 செலுத்த வேண்டும் என்ற உத்தரவை இந்தியன் ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோமேடிக் டெல்லர் மெஷின் எனப்படும் ஏடிஎம்கள் வந்தபிறகு, வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சுலபமாகி விட்டது.

ஏடிஎம்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது அந்தந்த வங்கிகளின் ஏடிஎம்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டது.

எந்த வங்கியின் ஏடிஎம்களையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஏடிஎம்களை வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கினர்.

வேறு வங்கியின் ஏடிஎம்மை பயன்படுத்தும் போது ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ.18 ஐ சம்பந்தப்பட்ட வங்கிகள் அடுத்த வங்கிக்கு கொடுத்து வந்தன. இதனால் அடுத்த வங்கிக்கு செலுத்த வேண்டிய கட்டணமும் கணிசமாக அதிகரித்தது. இதனால், அடுத்த வங்கி ஏடிஎம்மை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியை வங்கிகள் கேட்டுக் கொண்டன.

இதையடுத்து, ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளவர் மாதம் 5 முறை மட்டுமே இலவசமாக அடுத்த வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தலாம் என கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. இந்த முறையை ரிசர்வ் வங்கி மாற்றம் செய்துள்ளது.

அதற்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு முறையும் ரூ.15 கட்டணம் வாடிக்கையாளர் கணக்கில் வங்கிகள் பிடித்தம் செய்யும். சில ஆண்டுகளாக இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil