Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன?

அடல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன?
, திங்கள், 10 அக்டோபர் 2016 (10:45 IST)
அடல் பென்ஷன் யோஜனா திட்டம் ஒரு உத்தரவாத ஓய்வூதிய திட்டம் ஆகும். இத்திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) வழிநடத்திச் செல்கிறது.

 
மத்திய அரசால் 2015 ஆம் ஆண்டு தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அமைப்பு சாரா பிரிவில் பணிபுரிபவர்களும் ஓய்வூதிய காலத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 முதல் ரூ.5000 வரை பெறுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். 
 
மாத ஓய்வூதியம்:
 
அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்து வருவதினால் குறைந்தபட்சம் மாதம் 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை பெற இயலும்.
 
பிஎஃப் பங்களிப்பு:
 
இத்திட்டத்தில் முதலீடு செய்யும் அனைவருக்கும் மத்திய அரசு வருடாந்திர சேமிப்பு தொகையில் இருந்து 50 சதவீதம் வரையும் அதிகபட்சமாக வருடத்திற்கு 1,000 ரூபாய் வரை உங்கள் கணக்கில் கூடுதலாகச் சேர்க்கப்படும்.
 
வயது வரம்பு: 
 
அடல் பென்ஷன் யோஜனா திட்ட சேமிப்பை துவங்க 10 முதல் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும். மேலும் இந்த கணக்கை துவங்க வங்கி கணக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.
 
மாத முதலீடு: 
 
ஓய்வூதிய கணக்கைத் திறப்பவரின் வயதிற்கு ஏற்றவாறு, ஓய்வூதிய தொகை எவ்வளவு வேண்டும் என்பதைப் பொருத்து முதலீடும் மாறும். இந்த சேமிப்பிற்கான மாத தவனையும் வயதைப் பொருத்து மாறும்.
 
அடல் பென்ஷன் யோஜனா கணக்கு: 
 
அருகில் உள்ள வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் ஒரு சேமிப்பு கணக்கைத் துவங்க வேண்டும். பின்னர் அடல் பென்ஷன் யோஜனா கணக்கிற்கான விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். ஓய்வூதிய கணக்கை எளிதாகத் திறந்துவிடலாம்.
 
எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி கணக்குகள் வைத்து இருப்பவர்கள் எளிதாக இணையதள கணக்கை பயன்படுத்தி கணக்கை திறக்க இயலும்.
 
அபராதம்: 
 
இத்திட்டத்தின் கீழ் சேமித்து வரும் போது தவணையை செலுத்த தவறினால் 1 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடலாம். இது தவனைத் தொகையை பொருத்து மாறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநரை சந்தித்தார் வெங்கய்யா நாயுடு!