Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரிந்த விற்பனை; குறைந்தது ஐபோன் விலை

Webdunia
சனி, 12 ஜனவரி 2019 (14:48 IST)
விற்பனை குறைவு மற்றும் சாதனங்களுக்கான மோகம் குறைவந்திருப்பதால் ஐபோன்களின் விலையை குறைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 
 
அதன்படி, சீனாவில் ஐபோன் XR, ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் உள்ளிட்ட மாடல்களின் விலையை குறைப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
விலை குறைப்பு மட்டுமின்றி பை-பேக் சலுகைகள் மற்றும் இதர தள்ளுபடிகளையும் வழங்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவிற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. 
 
ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இதுகுறித்து வெளியான அறிவிப்பு பின்வருமாறு, ஐபோன் XR விலை 449 டாலர்கள், ஐபோன் XS 699 டாலர்கள் முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சீனாவில் இந்த விலை குறைப்பு அறிமுகமாகியுள்ள நிலையில் விரைவில் இந்தியா மற்றும் இதர நாடுகளில் ஐபோன் விலை குறைப்பு சார்ந்த அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments