5ஜி சேவையில் ஜியோவை முந்த ஏர்டெல் முனைப்பு!!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2017 (14:06 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குவால்கம் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின. 


 
 
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த டெலிகாம் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமான எரிக்சனுடன் இணைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. 
 
இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்க இருக்கிறது என தகவல் தெரிவிக்கின்றன. 
 
ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி மற்றும் இதர சேவைகளை எரிக்சன் நிறுவனம் வழங்கி வந்துள்ளது. தற்போது அடுத்த தலைமுறைக்கு 5ஜி சேவையை ஜியோ நிறுவனத்தை விட முன்னதாக வழங்க வேண்டும் என்ற முனைப்பில் ஏர்டெல் செயல்பட்டு வருகிறதாம். 
 
அதேபோல், நோக்கியா நிறுவனம் ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் 5G இணைப்பை கொண்டுவர திட்டமிட்டுள்ளது என செய்திகள் வெளியாகின.
 
5ஜி மொபைல் பிராட் பேண்ட் சேவை மையத்தை சென்னையில் துவங்கவுள்ளதாக நோக்கியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments