Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதியாக குறையும் சம்பளம்; நஷ்டத்தை சரிகட்டும் BSNL ...

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (11:53 IST)
விருப்ப ஓய்வு கேட்டு பிஎஸ்என்எல் ஊழியர்கள் பலர் விண்ணப்பித்துள்ள நிலையில் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளம் பாதியாக குறைகிறது. 
 
1½ லட்சம் பேர் பணியாற்றி வருகிற பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த நிதியாண்டு மட்டும் பிஎஸ்என்எல் 18 ஆயிரத்து 300 கோடி ரூபாய் நத்டத்தை சந்தித்துள்ளது. எனவே இந்த நஷ்டத்தில் இருந்து மீள தனது ஊழியர்களுக்கு பண பயன்கள் கொண்ட விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகம் செய்தது.   
 
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கான பண பயன்கள்:
1. பணி நிறைவு செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 35 நாட்கள் ஊதியம் கருணைத்தொகையாக வழங்கப்படும்.
2. பணி ஓய்வு காலம் வரையிலான எஞ்சிய காலத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 25 நாள் ஊதியம் அளிக்கப்படும். 
 
இந்த பண பயனுள்ள ஓய்வு திட்டத்தை 80,000 ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என பிஎஸ்என்எல் நிறுவனம் எதிர்பார்த்தது. ஆனால், தற்போது எதிர்பார்த்ததை விட அதிகமாகவே உழியர்கள் ஓய்வு வேண்டி விண்ணப்பித்துள்ளனர். மேலும் பல ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பிக்க கூடும் என தெரிகிறது. 
 
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு தற்போது ஆண்டுக்கு 14,000 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பலர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதால், இந்த சம்பள தொகை பாதியாக குறைந்துள்ளது. இனி, ஊழியர்களின் சம்பத்திற்காக 7,000 கோடி மட்டுமே செலவாகும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஜினியை சந்தித்ததே அரசியல்தான்.. அரசியலுக்காகதான்! - சீமான் குடுத்த ட்விஸ்ட்!

எங்க இருந்து வந்துச்சு.. நொடி பொழுதில் உக்ரைனை தாக்கிய ஏவுகணை! ரஷ்யாவின் ரகசிய ஆயுதம்..?

அடுத்த கட்டுரையில்
Show comments