Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 ஆண்டுகளில் 2 மடங்கான மானியம்

4 ஆண்டுகளில் 2 மடங்கான மானியம்
, செவ்வாய், 1 மார்ச் 2011 (16:39 IST)
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கும், உணவுப் பொருட்களுக்கும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் மானியம் 2007-08 ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளில் 100 விழுக்காடு உயர்ந்துள்ளது.

2007-08ஆம் நிதியாண்டில் மானியமாக அளிக்கப்பட்டது ரூ.70,926 கோடியாகும். அது இந்த நிதியாண்டில் ரூ.1,43,000 கோடியாக, அதாவது 102 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மத்திய அரசின் திட்டமற்ற இதர செலவுகளில் மானியமே மிகப்பெரிய செலவீனமாக உள்ளது. 2008-09இல் ரூ.1,29,708 கோடியாகவும், 2009-10இல் ரூ.1,41,351 கோடியாகவும், 2010-11ஆம் நிதியாண்டில் 1,43,570 கோடியாகவும் இருந்துள்ளது.

2011-12 நிதியாண்டில் இது ரூ.1,64,153 கோடியாக உயரும் என்று நிதி நிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil