Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2005க்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை எல்லா வங்கியிலும் மாற்றலாம் - ரிசர்வ் வங்கி விளக்கம்

2005க்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை எல்லா வங்கியிலும் மாற்றலாம் - ரிசர்வ் வங்கி விளக்கம்
, திங்கள், 17 மார்ச் 2014 (15:29 IST)
கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறுவது தொடர்பான சில விளக்கங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
FILE

கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதம் முடிவு செய்து அறிவித்தது. மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு இவை திரும்ப பெறப்படும். பொதுமக்கள், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் இறுதி வரை வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்.

இந்த காலகட்டத்தில் நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை. வங்கி வாடிக்கையாளர்களும், வாடிக்கையாளர் அல்லாதவர்களும் இவ்வாறு ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின்புறம், அந்த நோட்டு எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இருக்காது. இதை வைத்து பொதுமக்கள் எளிதாக அதை அடையாளம் கண்டு கொள்ளலாம். பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வரை அவகாசம் அளித்து கடந்த 3 ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. இருப்பினும், இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில் மக்களிடையே குழப்பங்கள் எழுந்தன. ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களை வாங்குவதில் வியாபாரிகள் பலரும் தயக்கம் காட்டினர். இதையடுத்து இந்த ரூபாய் நோட்டு திரும்பப்பெறுவது தொடர்பாக மக்களிடையே அடிக்கடி எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி ‘அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்’ சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இந்த விளக்கங்களை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளும் வங்கிகள் அவற்றை கவுன்டர்கள் மூலமாகவோ, ஏடிஎம்கள் மூலமாகவோ திரும்பவும் புழக்கத்தில் விட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நோட்டுக்களை ரிசர்வ் வங்கிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது.

2005க்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை 2015 ஜனவரி 1 ஆம் தேதி வரை மக்கள் எந்த தயக்கமும் இன்றி பயன்படுத்தலாம். எத்தனை ரூபாய் நோட்டுக்களை வேண்டுமானாலும் மாற்றலாம். எண்ணிக்கையில் கட்டுப்பாடு இல்லை. ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அவ்வாறு மாற்றுபவர் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. 2005க்கு முந்தைய நோட்டுக்களுக்கு பதில் வேறு நோட்டுக்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. விருப்பப்பட்டால், ஒருவரது கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம். பணத்தை மாற்றிக்கொள்வதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.

இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil