Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

200 ஜி.பி. ஒயர்லெஸ் பென் டிரைவ்: இந்தியாவில் அறிமுகம்

200 ஜி.பி. ஒயர்லெஸ் பென் டிரைவ்: இந்தியாவில் அறிமுகம்
, சனி, 19 மார்ச் 2016 (13:25 IST)
200 ஜி.பி. சேமிப்புத்திறன் கொண்ட ஒயர்லெஸ் பென் டிரைவ் இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


 

 
"சான்டிஸ்க்" நிறுவனம் இந்தியாவில் புதிய ஒயர்லெஸ் பென் டிரைவ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
 
200 ஜி.பி. சேமிப்புத்திறன் கொண்ட இந்த பென்டிரைவை ஆன்ட்ராய்டு போன்கள், கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட அனைத்துவிதமான டிஜிட்டல் கருவிகளுடனும் பொருத்திப் பயன்படுத்தலாம்.
 
இந்த பென் டிரைவை வை-ஃபை மூலம் கனைக்ட் செய்வதால் நிழற்படங்கள், வீடியோ படங்கள் உள்ளிட்டவற்றை அதிவேகமாக மாற்ற முடியும்.

இந்த வசதிகளுக்காக பிரத்யேகமாக "ஆப்" ஒன்றையும் "சான்டிஸ்க்" வழங்கியுள்ளது. முதற்கட்டமாக, ஆன்லைன் விற்பனை இணையதளங்களில் மட்டுமே இது விற்பனைக்கு வந்தள்ளது.
 
இதில் கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து இதை கடைகளிலும் விற்பனை செய்ய முடிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 
இதன் விலை இந்தியாவில் ரூ.9,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த பென் டிரைல் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Share this Story:

Follow Webdunia tamil