150 நில கையகப்படுத்தும் சிறப்பு பிரிவு-கமல்நாத்

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2009 (13:47 IST)
தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த நிலம் ஆர்ஜிதம் செய்வதில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 150 சிறப்பு நில ஆர்ஜித பிரிவுகளை தொடங்க இருப்பதாக மத்தி நெடுஞ்சாலை, சாலை போக்குவரத்து துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

பிக்கி என்று அழைக்கப்படும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்க வந்த கமல்நாத் செய்தியாளர்களிடம் பேசும் போது, 190 உள்கட்டமைப்பு திட்டங்கள் காலதாமதமாவதாக ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது. இதில் 70 விழுக்காடு திட்டங்கள் நிலம் கையகப்படுத்த ஏற்படும் பிரச்சனையே என்று தெரிய வந்துள்ளது.

இந்த பிரச்சனையை தீர்க்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 150 சிறப்பு நில ஆர்ஜித பிரிவுகளை தொடங்க இருக்கின்றது.

இந்த வருடம் 12 ஆயிரம் கிலோ மீட்டர் சாலை போடுவதற்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிற்கு விலைப்புள்ளிகள ை ( டெண்டர்) மத்திய அரசு கோர உள்ளது.

இதே போல் அடுத்த வருடம் 7,000 கி.மீட்டர் சாலை போடுவதற்காக ரூ.1 லட்சம் கோடி கோடி மதிப்பிற்கு விலைப்புள்ளிகள ை ( டெண்டர்) மத்திய அரசு கோர உள்ளது என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. தேமுதிக தொண்டர்களுக்கு பிரேமலதா அழைப்பு..!

Show comments