Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹொண்டா பிரையோ அறிமுகம்! விலை ரூ.3.95 இலட்சம்

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2011 (16:09 IST)
FILE
இந்தியாவின் சாலை, குடும்ப விருப்பம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஹொண்டா பிரையோ சிறிய வகைக் கார் இன்று இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஹொண்டா, இந்தியாவின் சீயல் குழுமத்துடன் இணைந்து கார்களைத் தயாரித்து வருகிறது. இந்தியாவின் நடுத்தர குடும்பத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டுள்ள பிரையோ, 1.2 லிட்டர் பெட்ரோல் இயந்திரத்தால் இயக்கப்படுவதாகும்.
தற்போது சந்தையில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் ஐ10, மாருதி வேகன்ஆர், செவர்லே பீட் ஆகியவற்றிற்கு ஹொண்டா பிரையோ போட்டியாக வந்துள்ளது.

இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒன்றின் விலை ரூ.3.95 இலட்சம் எனவும், மற்றொரு மாடல் ரூ.5.10 இலட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது (இது டெல்லி காட்சி அறை விலையாகும்).

இந்த கார் தயாரிப்பில் 80 விழுக்காடு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டது என்றும், அடுத்த ஓர் ஆண்டுக் காலத்தில் 90 விழுக்காடு பாகங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் என்று ஹொண்டா சீயல் நிறுவனம் கூறியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments