வோல்ஸ்வேகன் கார் தொழிற்சாலைக்கு ரூ. ஆயிரம் கோடி கடன்

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2009 (10:28 IST)
இந்தியாவில ் உள்ள வோல்ஸ்வேகன் கார் தொழிற்சாலைக்கு, உலக வங்கியின் துணை நிறுவனமான இண்டர்நேஷனல் பைனான்ஸ ் கார்ப்பரேஷன் ( IF C) ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளது.
இதன் மூலம் புனேயில் உள்ள வோல்ஸ்வேகன் ஆலையில் மேலும் பலருக்கு வேல ை வாய்ப்பு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது என்று ஐஎஃப்சி வெளியிட்ட அறிக்கையில ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் கார் தயாரிப்புத் தொழிற்சால ை கட்டுமானப் பணிகள் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இதில் ஏற்கெனவே வோல்ஸ்வேகன ் நிறுவனம் ரூ. 750 கோடி வரை முதலீடு செய்துள்ளது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கார்களைத் தயாரிக்க முடியும். இந்நிறுவனம் சிறிய ரகக் கார்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த ஆலையை உரிய காலத்தில் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி உதவிகள ை ஆராய்ந்து அதன் அடிப்படையில் இந்த கடன் தொகை வழங்கப்பட்டதாக உலக வங்கி அதிகாரிகள ் தெரிவித்தனர்.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

Show comments