Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விரைவில் ஸ்மார்ட்போன், டேப்லட்களில் தூர்தர்ஷன் சேனல்கள்

விரைவில் ஸ்மார்ட்போன், டேப்லட்களில் தூர்தர்ஷன் சேனல்கள்
, வியாழன், 6 ஜூன் 2013 (12:57 IST)
FILE
ஸ்மார்ட்போன், டேப்லட், லேப்டாப்களில் இலவசமாக தூர்தர்சனின் 19 சேனல்களை பார்க்கும் வசதி நாட்டின் 4 பெருநகரங்கள் உள்ளிட்ட 10 நகரங்களில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து பிரசார்பாரதி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், நடப்பு ஆண்டில் முதல்கட்டமாக 10 நகரங்களில் ஸ்மார்ட்போன்களில் தூர்தர்சனின் சேனல்களை காணும் விதத்தில் தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து 40 நகரங்களுக்கு இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.

தற்போது புதிய திட்டத்துக்காக டிஜிட்டல் வீடியோ ஒளிபரப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது என்று அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil