Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான ரத்திற்கு வருமானவரித்துறையே காரணம்-கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2012 (23:36 IST)
தங்களது விமான சேவை பெரிய அளவில் பாதிப்படைந்ததற்கு தங்களது வங்கிக் கணக்குகளை மத்திய வருமானவரித்துறை முடக்கியதே காரணம் என்று கிங்பிஷர் நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது.

" எங்கள் விமான சேவைகள் பெரிய அளவில் ரத்து ஆனதற்கு வருமானவரித் துறை எங்களது வங்கிக் கணக்குகளை திடீரென முடக்கியதே காரணம். இதனால் விமானங்களை இயக்குதவற்கான செலவினங்களை சந்திக்க முடியவில்லை. தற்போதைய இந்த நிலைக்கு வருமானவரித் துறையின் நடவடிக்கையே காரணம்." என்று கிங்பிஷர் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் சம்பளத்தை பட்டுவாடா செய்வதும் முடக்கப்பட்ட விமான சேவைகளை மீண்டும் துவக்குவதும், வங்கிக் கணக்குகளை மீண்டும் ஒப்படைத்தால் மட்டுமே சாத்தியம் என்று கூறுகிறது கிங் பிஷர்.

காட்மண்டு, பேஙாக்க், சிங்கப்பூர், டக்கா உள்ளிட்ட 30 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டது. இதனால் நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் அவதியுற்று வருகின்றனர்.

2010- 11 ஆம் ஆண்டில் கிங்பிஷர் ரூ.1,027 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. மேலும் ரூ.7 ஆயிரம் கோடி கடன் பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் கிங்பிஷர் ரூ.444 கோடி நஷ்டம் அடைந்துள்ளது.

இன்றைய விமான சேவை ரத்துகளில் மும்பையிலிருந்து 14 விமானக்களும், கொல்கட்டாவி 7-ம் டெல்லியில்௬ம் அடங்கும்.

பயணிகளுக்கு முழு டிக்கெட் தொகையையும் திருப்பி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வான்வழி போக்குவரத்து ஒழுங்கு முறை ஆணையத்தின் முன் கிங்பிஷர் நிறுவன மூத்த அதிகாரிகள் ஆஜராகி விமானச் சேவை ரத்திற்கான காரணங்களை விளக்கவுள்ளனர்.

விதிமுறைகளின் படி வான்வழிப் போக்குவரத்து ஆணையிஅத்திடம் விமான சேவைகளை ரத்து செய்தால் முன் கூட்டியே அனுமதி பெறவேன்டும். தற்போது இந்த அனுமதியைப் பெறாமல் விமான சேவையை ரத்து செய்துள்ளதால் உரிமம் ரத்து செய்யும் தீவிர நடவடிக்கையும் சாத்தியம் என்றே நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒழுங்குமுறை ஆணையம் கிங்பிஷர் விமான ரத்தினால் அவதியுறும் பயணிகளை பிற விமான சேவை நிறுவனங்கள் ஏற்றிச் செல்லவேண்டும் என்றும் அவர்களிடம் கூடுதல் தொகை வசூலிக்கக்கூடாது என்றும் வலியுறித்தியுள்ளதாகத் தெரிகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments