Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசா கட்டணம், அயல் பணி தடை குறித்து நாளை பேச்சு

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2010 (19:13 IST)
இந்திய தொழில் நெறிஞர்களையும், நிறுவனங்களையும் பெரிதும் பாதிக்கும் விசா கட்டண உயர்வு, வணிக அயல் பணி அளித்தலின் மீது ஒஹையோ மாகாணம் விதித்த தடை ஆகியன குறித்து நாளை நடைபெறவுள்ள வர்த்தக கொள்கை மன்றத்தில் இந்திய, அமெரிக்க அமைச்சர்கள் விவாதிக்கின்றனர்.

இந்திய, அமெரிக்க வர்த்தக அமைச்சக அதிகாரிகள் பங்கேற்கும் இந்த வர்த்தக கொள்கை மன்றக் ( Trade Policy Forum) கூட்டத்திற்கு இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவும், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ரோன் கிர்க்-கும் தலைமை ஏற்பார்கள்.

விசா கட்டண உயர்வும், வணிக அயல் பணித் தடையும் தற்காப்பு நடவடிக்கைகள் என்று இந்தியா கூறிவருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பிரச்சனையை உலக வர்த்தக அமைப்பிற்கு கொண்டு செல்ல இந்தியா திட்டமிட்டுள்ளது.

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

Show comments