Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொபைல், டேப்லெட் வரி குறைக்க வேண்டும் -கபில் சிபல்

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2013 (15:48 IST)
FILE
மொபைல் போன்களும், டேப்லட்களும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவி வருவதால் இந்த எலெக்ட்ரானிக் பொருட்களை மத்திய விற்பனை வரி சட்டத்தில்(சிஎஸ்டி) சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மாநில நிதியமைச்சர்கள் குழுவிற்கு மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், மொபைல் போன்கள் மற்றும் டேப்லட்கள், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உதவி வருகின்றன. இவற்றுக்கு வரியை குறைப்பதன் மூலம் இவற்றின் விற்பனையை அதிகரிக்க முடியும். எனவே, அதிகாரம் அளிக்கப்பட்ட மாநில நிதியமைச்சர்கள் குழு, மத்திய விற்பனை வரிச் சட்டத்தில் இதற்கு சிறப்பு முக்கியத்துவம் கொண்ட பொருட்களுக்கான அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் கடிதம் எழுதியுள்ளார்.

இதேபோல், மாநில முதல்வர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மொபைல் போன்கள் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு உதவும் கருவிகளுக்கும் வரியை குறைக்க வேண்டும். இதற்கு தேசிய எலக்ட்ரானிக்ஸ் 2012 ஆம் ஆண்டு கொள்கைகள் அனுமதி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

தற்போது மொபைல் போன், டேப்லட் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டுக்கான கருவிகள் ஆகியவற்றுக்கு பெரும்பாலான மாநிலங்கள் 12.5 சதவீதம் வரி விதிக்கிறது. ஆனால், சிறப்பு முக்கியத்துவம் கொண்ட பொருட்களுக்கு 5 சதவீதத்துக்கு மேல் வரி விதிக்க முடியாது. மத்திய அமைச்சரின் கோரிக்கையை மாநில அரசுகள் ஏற்கும்பட்சத்தில், மொபைல் போன்கள், டேப்லட் உள்ளிட்ட பொருட்களின் விலை 7 முதல் 8 சதவீதம் வரை விலை குறைய வாய்ப்புள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments