Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Webdunia
சனி, 23 மே 2009 (11:42 IST)
தென் மேற்கு பருவ மழையின் தாக்கத்தால், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தர்மபுரி, கிருஷணகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை மாலையில் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2712 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மழை பெய்ததை அடுத்து அணைக்கு நீர் வரத்து அதிகரித்தால், நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 5528 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.02 அடியாக இருந்தது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக மே 25 ஆம் தேதியே தொடங்கிவிடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கான அறிகுறியாக அந்தமான் தீவு பகுதியில் வங்காளவிரிகுடாவில் காற்றுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த காற்றழுத்த மண்டலம் நகர்ந்து கேரள பகுதிக்கு வருகின்ற 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதிக்குள் வந்தடையும் என்று தெரிகிறது.

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜுன் 1 ஆம் தேதி கேரளாவை தொடும். கேரளாவில் தொடும் மழை, பிறகு தமிழ்நாடு, கர்நாடாக மாநிலங்களில் பெய்யும். தென்மேற்கு பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும். இந்த நீர் கர்நாடாகாவில் கபினி, கிருஷணராஜ சாகர் நிரம்பிய பிறகு, மேட்டூர் அணைக்கு நீர் திறந்துவிடப்படும். அத்துடன் காவிரி டெல்டா பாசன பகுதிகளின் விவசாய பணிகளுக்காக, கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து, காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜுன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். இதற்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருக்க வேண்டும். அணையில் 45 டி.எம்.சி தண்ணீர் இருக்க வேண்டும். அப்போது தான் அணையில் இருந்து தண்ணீர் தண்ணீர் திறந்துவிட முடியும்.

தற்போது மழை பெய்து வருவாதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் தேவையான அளவு அதிகரித்து, இந்த வருடம் வழக்கமாக தண்ணீர் திறந்து விடப்படும் என்று விவசாயிகளிடையே நம்பிக்கை துளிர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழையை நம்பி 20 கோடி விவசாயிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments