Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரிக் மாநாட்டில்- பொருளாதார நெருக்கடி பயங்கரவாதத்திற்கு முக்கியத்துவம்

பிரிக் மாநாட்டில்- பொருளாதார நெருக்கடி பயங்கரவாதத்திற்கு முக்கியத்துவம்
மாஸ்கோ: , திங்கள், 15 ஜூன் 2009 (11:52 IST)
பொருளாதார நெருக்கடி, பயங்கரவாதம் ஆகிய இரண்டு முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிகளை “பிரிக” அமைப்பின் மாநாட்டில் சுட்டிக் காண்பிக்கப்படும் என்று ரஷிய அயலுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஆன்டிர் நிஸ்டிரியான்கோ (Andrei Nesterenko) தெரிவித்தார்.

ரஷியாவில் உள்ள யெகேடெரின்பர்க் நகரில் இந்தியா, ரஷியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் `பிரிக்' கூட்டமைப்பு மாநாடு நாளை தொடங்குகிறது.
இது குறித்து ரஷிய அயலுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஆன்டிர் நிஸ்டிரியான்கோ கூறுகையில், நாளை நடக்கும் பிரிக் கூட்டமைப்பின் மாநாட்டில் பிரேசில், இந்தியா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். முதன் முதலாக முழு அளவிலான பிரிக் கூட்டமைப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் முடிவில், தற்போதைய பொருளாதார நெருக்கடி, பயங்கரவாதம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வது பற்றி, நான்கு நாடுகளின் தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிடுவார்கள்.
உலக அந்நியச் செலவாணி கையிருப்பில் 45 விழுக்காடு பிரிக் கூட்டமைப்பு நாடுகள் வசம் உள்ளது. அதே போல் இந்த நாடுகளின் மக்கள் தொகை, உலக மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமாக உள்ளது. எனவே இந்த நாடுகள் தற்போதைய நெருக்கடிக்கு பிறகு, சர்வதேச அளவில் புதிய பொருளாதார அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு செலுத்துவார்கள்.
இதே போல் பயங்கரவாத ஆபத்துக்களை எதிர்கொள்வதுடன், தகவல் பரிமாற்றத்திற்கு பாதுகாப்பு ஆகியவற்றுடன், ஜி-8 அமைப்பு நாடுகளுடன் உணவு, எரிசக்தி பாதுகாப்பு, காலநிலை மாற்றம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகியன குறித்து கூட்டாக பேச்சுவார்த்தை நடத்துவது பற்றியும் கவனம் செலுத்துவார்கள்.
இந்த தலைவர்கள் தங்களுக்குள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வதுடன், இன்றைய சூழ்நிலை, சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு கூட்டு ஒத்துழைப்புக்கான அமைப்புகளை ஏற்படுத்துவது பற்றியும் கூட்டறிக்கை வெளியிடுவார்கள் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil