Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிபுரோபிலின், கார்பன் பிளாக்கிற்கு குவிப்பு வரி

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2009 (15:47 IST)
சீனா, ரஷியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்பன் பிளாக் மீது குவிப்பு வரி விதிக்கப்படுகிறது. இது ரப்பர் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாகும்.

இதே போல் சவுதி அரேபியா, ஓமன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாலிபுரோபலின் மீதும் குவிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. இது பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் கச்சா பொருளாகும்.

கார்பன் பிளாக் மீது கிலோவிற்கு 0.078 டாலர் முதல் 0.195 டாலர் வரை குவிப்பு வரி விதிக்கப்படும்.

இதே போல் பாலிபுரோபிலின் மீது டன்னிற்கு 44.43 டாலர் முதல் 1033.65 டாலர் வரை குவிப்பு வரி விதிக்கப்படும் என்று மத்திய கலால் மற்றும் சுங்கத்தீர்வை வாரியத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வரி விதிக்க முக்கிய காரணம், இவற்றின் மதிப்பை விட குறைந்த விலைக்கு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இதனால் உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படுகிறது. உள்நாட்டு நிறுவனங்களை பாதுகாக்கவே, குவிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளாத தெரிவித்துள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments