Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடப்பு ஆண்டில் களமிறங்கும் புதிய கார்கள்; கார் நிறுவனங்களின் அதிரடித் திட்டம்

நடப்பு ஆண்டில் களமிறங்கும் புதிய கார்கள்; கார் நிறுவனங்களின் அதிரடித் திட்டம்
, புதன், 24 ஜூலை 2013 (16:39 IST)
மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் தனது E63 AMG காரை நொய்டாவில் அறிமுகம் செய்கிறது. ஜூலை 25 (நாளை) மெர்சிடெஸ் பென்ஸ் தன் E63 AMG காரை அறிமுகப்படுத்தப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஃபோர்டு இந்தியா இந்தியா நிறுவனத்தின் இகோஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்த நாட்களிலேயே 30 ஆயிரத்திற்கும் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் அறிமுக மாடலுக்கான சிறப்பு விலையுடன் சந்தையில் வெளியிடப்பட்டது. இகோஸ்போர்ட் 10 வேரியன்ட்களில், 4 ட்ரிம்களில், மூன்று என்ஜின் தேர்வுகளுடன் மானுவல் ட்ரான்ஸ்மிஷனிலும், ஒரு ஆட்டோ ட்ரான்ஸ்மிஷனுடனும் ஏழு நிறங்களிலும் வெளிவருகிறது.
webdunia
FILE

ஜூலை 25 ஆம் தேதி (நாளை) மெர்சிடெஸ் பென்ஸ் தன் E63 AMG காரை நொய்டாவில் அறிமுகப்படுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரெனல்ட் - நிசான் கூட்டாண்மை இந்தியாவில் தங்களின் முதலீட்டை 5 பில்லியன் டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளது. வளர்ந்து வரும் உலக பொருளாதாரத்தின் விளைவால் புதிதாக கார் வாங்குவோரின் எண்ணிக்கை உயரும் என்பதால் குறைந்த விலை கார்களை உற்பத்தி செய்ய இவர்கள் திட்டமிட்டுள்ளதே இவ்வளர்ச்சிக்கு காரணம் என்று இந்நிறுவனத் தலைவர்கள் கூறுகின்றனர்.

மிட்சுபிஷி மோட்டார்ஸ், இந்தியாவில் தங்களின் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக பஜீரோ ஸ்போர்ட் ஆனிவெர்சரி எடிஷனை கொண்டு வந்துள்ளது. சென்னை அருகே திருவள்ளூரில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் லிமிடெட் உற்பத்தி சாலையில் பஜீரோ ஸ்‌போர்ட் தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில் அதிக விற்பனையில் உள்ள சொகுசு கார் நிறுவனமான ஆடி சமீபத்தில் செடான் ஆ6 ஸ்போர்டி வெர்ஷன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil