Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை சரிவால் சிஏடி 3.9% குறையும்

Webdunia
வியாழன், 2 மே 2013 (18:29 IST)
FILE
இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை (சிஏடி) அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் படிப்படியாகக் குறையும். நடப்பு நிதியாண்டில் இது 3.9 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பர்கிலேஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஒரு நாடு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்புக்கும், இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்புக்கும் இடையே உள்ள வித்தியாசம் நடப்பு கணக்கு பற்றாக்குறை (சிஏடி) எனப்படுகிறது. 2010-2011 ஆம் நிதியாண்டு முதலே இந்தியாவின் சிஏடி அதிகரித்து வருகிறது.

2012-2013 ஆம் நிதியாண்டில் இது அதிகபட்ச அளவாக 4.9 சதவீதமாக இருந்தது. டிசம்பருடன் முடிந்த காலாண்டில், 6.7 சதவீதமாக உச்சகட்டத்தில் இருந்தது. இது படிப்படியாக நடப்பு நிதியாண்டில் 3.9 சதவீதமாக குறையும். வர்த்தகம் ஆகும் பொருட்களின் விலை, தங்கம் இறக்குமதி ஆகியவை கடந்த 2 ஆண்டுகளாக சிஏடி அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்தன.

விரைவில் வர்த்தக பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உள்நாட்டில் வளர்ச்சி அதிகரிக்கும், பணவீக்கம் குறையும். கடந்த சில வாரங்களாக தங்கம், கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளது. இது சிஏடி குறைய உதவும்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments