Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் ரூ.285 உயர்வு, வெள்ளி ரூ.200 சரிவு

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2011 (16:59 IST)
லண்டன் உலோகச் சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்ததையடுத்து, வணிகர்கள் அதிகம் வாங்கிவருவதன் காரணமாக தங்கத்தின் விலை இன்று மட்டும் ரூ.285 உயர்ந்து ரூ.27,275 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் தொடர்ந்து சரிந்து வரும் வெள்ளியின் விலை இன்றும் கிலோவிற்கு ரூ.200 குறைந்து ரூ.53,300 ஆக குறைந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் எதிர்கொண்டுவரும் கடன் சுமையினால் பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகலாம் என்கிற அச்சத்தின் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்குவதால், லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸூக்கு 10.28 டாலர் அதிகரித்து 1,668.60 டாலர்களாக அதிகரித்துள்ளது.

நிதிச் சந்தையில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியும் தங்கத்தில் முதலீட்டை அதிகரித்துவருவதாக பன்னாட்டு சந்தைகள் தெரிவிக்கின்றன.

சவரன் விலை (8 கிராம்) ரூ.100 அதிகரித்து ரூ.22,000 ஆக அதிகரித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments