Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 2010-இற்குள் 60,000 நேனோ கார்கள்

Webdunia
உலகின் மிக மலிவான காரான நேனோ கார்களை உற்பத்தி செய்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜூலை மாததிற்குள் சுமார் 60,000, நேனோ கார்களை விற்பனைக்கு அளிக்கும் என்று அறிவித்துள்ளது.

2008- 09 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்த டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா, சனந்தில் உள்ள புதிய தொழிற்சாலை ஆண்டொன்றிற்கு 2.5 லட்சம் கார்களை தயாரிக்கும் திறன் கொண்டது என்று தெரிவித்தார். ஆனால் இந்த தொழிற்சாலை இந்த நிதியாண்டு முடிவிலேயே முழுதும் தயார் நிலை பெறும்.

இதனால் இதற்கிடையே வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய மற்ற தொழிற்சாலைகள் மூலம் சுமார் 50.000 முதல் 60,000 கார்களை அடுத்த ஜூலைக்குள் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாய் அவர் அந்த அறிக்கையில் வாசித்தார்.

தற்போது பன்ட் நகர் தொழிற்சாலையில் நேனோ கார்கள் தயராஇக்கப்படு வருகின்றன. இதன் உற்பத்தித் திறன் ஆண்டொன்றிற்கு 50,000 கார்களாகும் என்று ரத்தன் டாடா மேலும் தெரிவித்தார்.

சனந் தொழிற்சாலை கட்டுமானம் முடிந்து அங்கு உற்பத்தி தொடங்கி விட்டால் பன்ட் நகர் உற்பத்தியுடன் இணைந்து 2010 அக்டோபர்-டிசம்பர் மாத இடைவெளியில் சுமார் ஒரு லட்சம் நேனோ கார்களை விற்பனைக்கு கொண்டு வருவோம் என்று டாடா மோட்டர்ஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments