Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேவை வரி வருவாய் அதிகரிப்பு

சேவை வரி வருவாய் அதிகரிப்பு
, வெள்ளி, 27 டிசம்பர் 2013 (15:37 IST)
FILE
சேவை வரி வருவாய் அதிகரித்ததுபோல், சேவை வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கடந்த 2005-06ல் சுமார் 8,46,155 சேவை வரி செலுத்துவோர் எண்ணிக்கை இருந்தது. இதற்கு அடுத்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 9.40 லட்சமாகவும் 2007-08ம் ஆண்டில் 10.73 லட்சமாகவும், இதற்கு அடுத்த ஆண்டில் 12.04 லட்சமாகவும் 2009௰ம் ஆண்டில் 13.07 லட்சமாகவும், 2010௧1ம் ஆண்டில் 13.72 லட்சம் பேராகவும் 2011௧2ல் இந்த எண்ணிக்கை 15.35 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.

இதேபோல், சேவை வரி விதிக்கப்படும் இனங்கள் கடந்த 1994ம் ஆண்டில் மூன்றாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கடந்த 2012ல் 119 இனங்களுக்கு சேவை வரி விதிக்கப்படுகிறது.

நிதி சட்டத்தின் பிரிவு 66டி-ன்கீழ் பட்டியலில் குறிப்பிட்டுள்ள எல்லா சேவைகளுக்கும் வரி விதிக்க அரசு வகை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் எதிர்மறை பட்டியலின் அடிப்படையில் சேவை வரி விதிக்கும் முறையை மத்திய நிதியமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

அதேபோல், சேவை வரி செலுத்த தவறியவர்களுக்கு மன்னிப்பு முறையில் செலுத்தும் வசதியையும் நிதி அமைச்சகம் அறிமுகம் செய்தது. சேவை வரியை தாமாக முன்வந்து அறிவித்து செலுத்தும் ஊக்க முறை (விசிஇஎஸ்) இந்த ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிதி மசோதாவில் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அபராதம் அல்லது தாமத கட்டணம் இல்லாமல் சேவை வரி செலுத்தலாம். இத்திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் ஒருவர் தான் செலுத்த வேண்டிய சேவை வரி குறித்த விவரத்தை உரிய அதிகாரியிடம் தெரிவித்து வரி செலுத்தலாம்.

Share this Story:

Follow Webdunia tamil