Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுசூகி மோட்டார் சைக்கிள் விற்பனை 51% உயர்வு

சுசூகி மோட்டார் சைக்கிள் விற்பனை 51% உயர்வு
, புதன், 1 செப்டம்பர் 2010 (15:02 IST)
சுசூகி மோட்டார் சைக்கிள் விற்பனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆகஸ்டில் 51 விழுக்காடு அதிகம் விற்பனையாகியுள்ளதென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்டில் 12,809 மோட்டார் சைக்கள்கள் விற்பட்டதெனவும், இந்த ஆகஸ்டில் மொத்த விற்பனை 19.314 என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“பயனாளர் கொடுக்கும் பணத்திற்கு உரிய மதிப்பை அவருக்கு தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கு, அதனை நாங்கள் சாதித்துள்ளோம் என்பதே நிரூபணம் ஆகியுள்ளது. இந்த சாதனையை எதிர்காலத்திலும் தொடருவோம” என்று சுசூகி மோட்டார் நிறுவனத்தின் தலைவர் அதுல் குப்தா கூறியுள்ளார்.

GS 150 R மற்றும் Access 125 ஸ்கூட்டர் ஆகியன தற்போது நன்கு விற்பனையாகிக் கொண்டிருக்கும் சுசூகி மோட்டாரின் இரு சக்கர வாகனங்களாகும்.

Share this Story:

Follow Webdunia tamil