Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சார்க் நாடுகளிடையிலான வர்த்தகம் அதிகரிக்க முயுற்சி எடுக்க வேண்டும்

சார்க் நாடுகளிடையிலான வர்த்தகம் அதிகரிக்க முயுற்சி எடுக்க வேண்டும்
அகர்தலா: , திங்கள், 1 பிப்ரவரி 2010 (16:15 IST)
சார்க் நாடுகளிடையிலான வர்த்தகம் அடுத்த நிதி ஆண்டில் இரு மடங்காகவாவது அதிகரிக்கும் என்று சார்க் வர்த்தக சங்கம் கூறியுள்ளதுடன், வரி இல்லாத பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கையை எடுக்கும் படி கோரியுள்ளது.

தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், மாலத்தீவு, ஸ்ரீலங்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

சார்க் நாடுகளின் வர்த்தக சங்க தலைவர் அனிசுல் ஹக் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், சார்க் நாடுகளிடையே வர்த்தகம் அதிகரிக்க, இந்த நாடுகளிடையே அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு விசா இல்லாமல் 100 தடவை பயணம் செய்யலாம் என்பதை 500 தடவையாக அதிகரிக்க வேண்டும். சார்க் நாடுகளுடையே விசா கொடுப்பதை எளிமைப்படத்த வேண்டும்.

அத்துடன் எட்டு நாடுகளும் இறக்குமதி வரியை குறைப்பதுடன், பிராந்தியத்திற்குள் வர்த்தகம் அதிகரிக்க நிதி உதவி அளிக்க வேண்டும் என்று அரசுகளிடம் கூறியுள்ளோம். விசா பெறுவதும், ஏற்றுமதிக்கான பொருட்களுக்கு அனுமதி பெறுவது மிக கடினமாக உள்ளது. குறிப்பாக இந்தியா-வங்காள தேசத்திற்கு இடையிலான ஏற்றுமதி, விசா அனுமதி பெறுவது கடினமாக உள்ளது என்று தெரிவித்தார்.

சிட்டகாங், மங்கலா துறைமுகங்களுக்கு போக்குவரத்து வசதியை வங்காள தேசம் செய்து கொடுத்திருப்பதை நியாயப்படுத்திய அனிசுல் ஹக், இவற்றில் இருந்து வங்காளதேசம் வருடத்திற்கு குறைந்தபட்சம் 1.2 பில்லியன் டாலர் வருவாய் பெற முடியும். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ய வங்காளதேசம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திரிபுரா அரசு அகர்தலாவில் வங்காள பஜார் அமைக்க, வணிக வளாகத்தில் குறைந்த விலையில் வங்காளதேச வர்த்தக சங்கத்திற்கு இடம் கொடுத்துள்ளது.

வங்காள தேசத்திற்கு சார்க் நாடுகளிடையிலான வர்த்தகத்தில், இந்தியாவுடன் அதிக அளவு வர்த்தகம் செய்கின்றது. வங்காள தேசத்தில் இருந்து இந்தியாவுக்கு 358.08 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதே போல் இந்தியாவில் இருந்து 31.39 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 3.74 பில்லியன் டாலராக உள்ளது.

அதே நேரத்தில் சீனாவுக்கும்-வங்காள தேசத்திற்கும் இடையே இரு தரப்பு வர்த்தகம் 3.21 பில்லியன் டாலராக உள்ளது.

வங்காள தேசத்தின் மொத்த அயல்நாட்டு வர்த்தகத்தில், சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளின் பங்கு ஆறில் 1 பங்காக உள்ளது என்று அனிசுல் ஹக் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil