Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் இணையதளம் மூலம் இனி பணம் அனுப்பலாம்

Webdunia
வெள்ளி, 24 மே 2013 (15:28 IST)
FILE
கூகுள் இணையதளம் மூலம் கடிதங்கள், விழா நிகழ்ச்சி பத்திரிகைகள், ஆவணங்கள், போட்டோக்கள் ஆகியவற்றை அனுப்பி கொண்டிருந்த காலம் போய் இப்போது கூகுள் மூலம் பணத்தையும் அனுப்பும் வசதி வந்து விட்டது.

கூகுள் இணையதளம் சர்வதேச அளவில் புகழ்பெற்றதாக உள்ளது. இமெயிலுக்கு அதிகளவில் இடவசதி அளித்து புரட்சி ஏற்படுத்தியது இதுதான். பின்னர் அதிவேக செயல்பாடு மூலமும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இதனால், பெரும்பாலான மக்கள் கூகுள் மெயிலில் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில், இந்நிறுவனம் இப்போது பணம் அனுப்பும் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. சான்பிரான்சிஸ்கோவில் நடந்த ஐ.ஓ. கருத்தரங்கில் இதுதொடர்பான விவரங்களை கூகுள் நிறுவனம் அறிவித்தது. முதல்கட்டமாக அமெரிக்காவில் இச்சேவை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், விரைவில் உலகம் முழுவதும் இச்சேவை அறிமுகம் செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பணம் அனுப்ப விரும்புபவர்கள், கூகுள் இணையதளத்துடன் நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கை இணைத்து கொள்ளலாம் அல்லது கிரெடிட், டெபிட் கார்டு மூலமும் பணத்தை அனுப்பலாம். இதற்கு சேவை கட்டணமாக 2.9 சதவீதம் வசூலிக்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறோமோ அவருக்கு இமெயில் கடிதம் எழுதி, அதை பேப்பர் கிளிப் குறியுடனும், டாலர் குறியுடனும் இணைக்க வேண்டும். பின்னர் எவ்வளவு தொகையை அனுப்ப விரும்புகிறோம் என்பதை குறிப்பிட்டு செண்ட் பட்டனை தட்டினால் அடுத்த முனைக்கு பணம் சென்று சேர்ந்து விடும்.

இந்த சேவையில் பணம் பெறுபவர்கள் கூகுள் மெயிலில் கணக்கு வைத்திருக்காவிட்டால், குறைந்தபட்சம் கூகுள் வாலட்டில் கணக்கு வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் பணத்தை பெற முடியும்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments