Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்பன் ஸ்மார்ட்போனில் கோச்சடையான்

கார்பன் ஸ்மார்ட்போனில் கோச்சடையான்
, செவ்வாய், 11 மார்ச் 2014 (17:03 IST)
இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான கார்பன், கோச்சடையான் சிக்னேச்சர் போன் சீரிஸை வெளியிட்டுள்ளது. இதை நடிகர் ரஜினிகாந்த், கார்பன் மொபைல்ஸ் நிறுவன தலைவர் சுதிர் ஹசிஜா சென்னையில் அறிமுகம் செய்தனர்.
FILE

கோச்சடையான் தி லெஜன்ட் பட இயக்குநர் சவுந்தர்யா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ரஜினிகாந்த் கையெழுத்து இடம்பெற்ற இந்த கோச்சடையான் சிக்னேச்சர் போன் சீரிஸ் ஆன்டிராய்டு போன்களில் கார்பன் ஏ36, ஏ6 பிளஸ் மற்றும் டைட்டானியம் 351 உடன் இரண்டு சிறப்பு போன்கள் தி லெஜன்ட் 2.4 மற்றும் தி லெஜன்ட் 2.8 உள்ளன. இதில் கோச்சடையான் பட பாடல்கள், வசனங்கள், வீடியோக்கள், இமேஜ்கள் உள்ளன.

இதுதொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் ரஜினியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். மேலும் ரஜினிகாந்த்தின் சிறந்த படங்கள், வசனங்கள் அடங்கிய கார்பன் 4ஜிபி எஸ்டி கார்டுகளையும் கார்பன் வெளியிட்டுள்ளது. சிக்னேச்சர் சீரிஸ் ^1990 முதல் ^8000 வரை கிடைக்கிறது என சுதிர் ஹசிஜா கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil