Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலை பருப்பு ஏற்றுமதிக்கு அனுமதி

Webdunia
ஐக்கிய நாடுகள் சபை திட்டத்தின் கீழ், நேபாளத்திற்கு 500 டன் கடலை பருப்பு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பருப்பு, சிறு தானியங்களின் விலை அதிகரிக்காமல் இருக்க, இதன் ஏற்றுமதிக்கு 2006 ஜுன் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்நிய நாட்டு வர்த்த இயக்குநரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பானையில் ( notification ), பருப்பு ஏற்றுமதிக்கான தடை, ஐக்கிய நாடுகள் சபை உணவு திட்டத்தின் படி, 500 டன் கடலை பருப்பு நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கு பொருந்தாது என்று கூறிப்பட்டுள்ளது.

அத்துடன் நேபாளத்திற்கு கடலை பருப்பை, கான்பூரைச் சேர்ந்த மகாலட்சுமி கிராமோதயக் சன்ஸ்தான், பஜ்ரன் பருப்பு ஆலை, அனந்தேஷ்வர் அக்ரோ புட் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களும் ஏற்றுமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு தேவைக்கு 180 லட்சம் டன் பருப்பு தேவை. இந்த ஆண்டு 140 லட்சத்து 18 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. (சென்ற வருடம் 140 லட்சத்து 76 ஆயிரம் டன்).

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments