Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறால் வெள்ளைப் புள்ளி நோய்க்கு விடிவு காண முயற்சி!

இறால் வெள்ளைப் புள்ளி நோய்க்கு விடிவு காண முயற்சி!

Webdunia

பண்ணைகளில் வளர்த்து ஆண்டிற்கு ரூபாய் 4,000 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவரும் இறால் வளர்ப்பை பெருமளவிற்கு பாதித்து வரும் வெள்ளைப் புள்ளி நோய்க்கு தீர்வு காண நார்வே ஆய்வு அமைப்பின் உதவியுடன் மத்திய உவர் நீர் மீன்வள ஆராய்ச்சி மையம் முயற்சி எடுத்து வருகிறது!

தமிழ்நாட்டிலும், ஆந்திரத்திலும் இறால் பண்ணைகளில் பெருமளவிற்கு வளர்க்கப்படும் பினாயல் மோனோடான் (கூபைநச ளhiஅயீ) எனும் இறால் வகை வெள்ளைப் புள்ளி எனும் நுண்ணுயிரி தாக்குதலால் பாதிக்கப்படுவதும், அந்த பாதிப்பு அந்த இறாலின் குஞ்சுகளுக்கும் பரவி மொத்த உற்பத்தியையும் வீணாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இறால் வளர்ப்புத் தொழிலை கேள்விக்குறியாக்கிடும் இந்த நோய்க்கு தீர்வு காண, அந்த நுண்ணுயிரி தாக்குதலால் பாதிக்கப்படாத தெரிவு செய்யப்பட்ட இறால்களை வளர்த்து குஞ்சு பொறிக்க வைத்து நோய் எதிர்ப்பு ஆற்றலுடன் கூடிய புதிய வகை இறாலை உற்பத்தி செய்யும் திட்டத்துடன் இந்த புதிய முயற்சி தொடங்கியுள்ளது.

பண்ணை இறால் வளர்ப்பில் முன்னணியில் உள்ள நாடான நார்வேயில் இயங்கிவரும் நீர்வள ஆராய்ச்சிக் கழகம் (ஹமஎயகடிசளம) இதற்கான வழிகாட்டுதலை மத்திய உவர் நீர் மீன் வள ஆராய்ச்சி மையத்திற்கு அளிக்க முன்வந்துள்ளது. ரூபாய் 1.5 கோடி செலவில் நேற்று துவக்கப்பட்டுள்ள இத்திட்டம் குறித்து விளக்கிய சென்னை பட்டினப்பாக்கத்தில் இயங்கிவரும் மத்திய உவர் நீர் மீன் வள ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஐயப்பன், நமது நாட்டின் பல்வேறு இடங்களில் கிடைக்கும் மோனோடான் வகை இறால்களை கொணர்ந்து அவைகளை நோய் எதிர்ப்பு சக்தியுடையதை தெரிவு செய்து அவைகளின் வாயிலாக குஞ்சுகளை உருவாக்கும் முயற்சி இறால் வளர்ப்பில் ஒரு புதிய திருப்புமுனை என்று கூறினார்.

இத்திட்டம் குறித்து விளக்கிய நார்வே ஆய்வாளர் டாக்டர் மார்டின் ரை, நார்வேயின் நிபுணத்துவம் சீபாவின் இந்த முயற்சிக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

நார்வேயில் பொதுவாக வளர்க்கப்படும் அட்லாண்டா சால்மோன், ரெய்ன்போ டிரௌட் ஆகிய வகைகளும், இந்தியாவில் வளர்க்கப்படும் பியானல் மோனோடோனும் வெவ்வேறாக இருந்தாலும் ஒரே மரபணு அடிப்படையைக் கொண்டுள்ளதால் தங்களால் நன்கு உதவ முடியும் என்று கூறினார்.

1970 ஆம் ஆணடு முதல் இறால் உற்பத்தியில் பெரும் சாதனை படைத்துவரும் நார்வேயின் உதவியுடன் வெள்ளைப் புள்ளி நோய்க்கு தீர்வு காணப்படும் என்று நம்பிக்கையை அளிக்கின்றது மத்திய உவர் நீர் மீன் வள ஆராய்ச்சி மையம்.

Share this Story:

Follow Webdunia tamil