Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறக்குமதி செய்யும் தங்கம், வெள்ளிக்கு அடிப்படை விலை நிர்ணயம்

Webdunia
திங்கள், 3 ஜூன் 2013 (15:47 IST)
FILE
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைவதும், உயர்வதுமாக இருப்பதால், தங்கத்தை இறக்குமதி செய்ய அடிப்படை விலையாக 10 கிராமுக்கு ரூ.25,956 ஆக அரசு உயர்த்தியுள்ளது. அதே சமயத்தில் வெள்ளிக்கான அடிப்படை மதிப்பை கிலோவுக்கு ரூ.41,677 ஆக குறைத்துள்ளது.

மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம் வெளியிட்ட அறிக்கையில், தங்கம், வெள்ளி ஆகிய மதிப்பு வாய்ந்த உலோகங்களை இறக்குமதி செய்யும்போது குறைவான வரி போடப்பட்டு வரி ஏய்ப்பு நடைபெறாமல் தடுக்க அரசே அடிப்படை விலையை நிர்ணயம் செய்கிறது.

கடந்த மாதத்தில் தங்கம் இறக்குமதிக்கான அடிப்படை மதிப்பு (10 கிராமுக்கு) ரூ.24,882 ஆகவும், வெள்ளி இறக்குமதி அடிப்படை மதிப்பு (1 கிலோவுக்கு) ரூ.43,034 ஆகவும் இருந்தது. இந்நிலையில் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

அதே சமயத்தில் வெள்ளி விலை சற்றே குறைந்துள்ளது. எனவே அரசு அதற்கு ஏற்ப அடிப்படை மதிப்பை நிர்ணயித்துள்ளது. நடப்பு ஏப்ரல், ஜூன் வரையிலான 3 மாதங்களில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி சாதனை அளவாக 300 முதல் 400 டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments